விளையாட்டு

ஆப்கானிஸ்தானின் ஷாஷாட் உலக கிண்ணத் தொடரில் இருந்து வெளியேற்றம்

ஆப்கானிஸ்தானின் விக்கட் காப்பாளரும், ஆரம்ப துடுப்பாட்டக்காரருமான மொஹமட் ஷாஷாட், உலகக்கிண்ண தொடரில் இருந்து வெளியேறியுள்ளார்.
முழங்காலில் அவருக்கு ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக அவர் தொடரில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது அணிக்கு ஏற்பட்டுள்ள பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
அவரது அதிரடி துடுப்பாட்டத்தின் காரணமாக ஆப்கானிஸ்தான் கடந்த காலங்களில் பல வெற்றிகளைப் பெற்றிருந்தது.
எனினும் உலகக்கிண்ண தொடரில் அவர் சந்தித்த இரண்டு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.