உலகம்

ஆப்கானில் கடந்த வருடமே அதிகளவு குண்டுத்தாக்குதல்கள் – அமெரிக்க விமானப்படை மத்திய கட்டளைத் தளம் அறிக்கை !

ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கபட்ட நாளில் இருந்து கடந்த வருடமே அதிகளவு குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.

2006இல் இருந்து அமெரிக்கா தனது படை நடவடிக்கைகளை அந்த நாட்டில் முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில், கடந்த வருடம் மாத்திரம் போர்விமானங்கள் மூலம் அங்கு 7423 குண்டுகள் வீசப்பட்டுள்ளன .

கடந்த 2018ஆம் ஆண்டு 7,362 குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக, அமெரிக்க விமானப்படை மத்திய கட்டளைத் தளம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கீழ் 2009ஆம்  ஆண்டு 4,147 குண்டுகள் வீசப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது