இலங்கை

ஆசிரியர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கறுப்புப்பட்டி போராட்டம்

 

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா கவரவில தமிழ் வித்தியாலயத்தில் பணிபுரிந்து வரும் இரண்டு ஆசிரியர்கள் தாக்கபட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று . செவ்வாய்க்கிழமை குறித்த வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் ,மாணவர்களின் பெற்றோர்கள் பெற்றோர்கள் கறுப்புப்பட்டி அணிந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கடந்த மாதம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரன சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெற்றோர் சங்க கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளுக்கு அமைய பாடசாலையிலுள்ள மேலதிக பாதை ஒன்று வேலியிட்டு மறைக்கப்பட்டு ஒருவழி பாதையூடாக மாணவர்கள் பாடசாலைக்குள்
வருவதற்கான ஏற்பாடுகள் பாடசாலை நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் அன்றைய தினம் பாடசாலை முடிந்து வீடுதிரும்பி கொண்டிருந்த ஆசிரியர்கள் இருவர்மீது
பேருந்து தரிப்பிடத்தில் வைத்து கும்பல் ஒன்றுகடுமையாக தாக்கிசென்றமை தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டமைக்கு அமைய ஐந்து பேர் கைது செய்யபட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக மஸ்கெலியா
பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து இன்று தினம் கறுப்புப்பட்டி அணிந்து எதிர்ப்பு நடவடிக்கையில்
ஈடுபட்ட பெற்றோர்களும் ஆசிரியர்களும் கருத்து தெரிவிக்கையில் – மஸ்கெலியா
கவரவில தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை
பெற்றோர்களாகிய நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம் எனவே இன்று நாட்டில்
ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் போய்விட்டது ஆகவே இந்த தாக்குதல்
சம்பவத்தை கருத்தில் கொண்டு கல்வி அமைச்சும் சம்பந்தபட்ட தரப்பினர்களும்
உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – என்றனர் .

– நோர்ட்டன் ப்ரிட்ஜ் செய்தியாளர் –