விளையாட்டு

ஆசிய கிரிக்கெட் போட்டித் தொடர் -இலங்கைக்கு முதல் போட்டி ஓமானுடன்வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான அட்டவணையை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

ஆசிய கிரிக்கெட் சம்மேளனத்தினால் கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும், நடத்தப்பட்டுவரும் வளர்ந்துவரும் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண தொடரின் நான்காவது பருவகாலத்திற்கான தொடர் நடைபெறவுள்ளது.

இந்த வருடத்திற்கான போட்டியில், மொத்தமாக எட்டு அணிகள் பங்குகேற்பதோடு, அவைகள்  இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

குழுநிலை போட்டியின் முடிவில், முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்று, அதிலிருந்து இரண்டு அணிகள் இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்படவுள்ளன.

குழு ஏயில், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஓமான் ஆகிய அணிகளும், குழு பியில், இந்தியா, பங்களாதேஷ்,  ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த வருடத்திற்கான தொடர், அடுத்த மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

பங்களாதேஷின் ஐந்து மைதானங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

மேலும் கடந்த வருடம் நடைபெற்ற மூன்றாவது வளர்ந்துவரும் ஆசியக் கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை இந்தியாவை தோற்கடித்து நடப்பு சம்பியனாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.