விளையாட்டு

அவுஸ்திரேலிய வீரருக்கு கொரோனா தொற்று?

 

அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தனிமைப்படுத்தப்பட்டுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய ரிச்சர்ட்சன் தொண்டை வலி ஏற்பட்ட பின்னர் தனிமைப்படுத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

தீவிர தொண்டை வலியால் ரிச்சர்ட்சன் அவதியுறுவதாகவும், எனினும் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச போட்டி இரசிகர்கள் இல்லாமல் வெற்று மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.

மக்கள் அதிகளவில் ஒன்றுகூடுவதால் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் விளையாட்டு நிகழ்வுகளை இடைநிறுத்தவதற்கு அல்லது இரசிகர்களை அனுமதிக்காமல் நடத்துவதற்கு பல்வேறு நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இத்தாலி விளையாட்டு நிகழ்வுகளை இடைநிறுத்தியுள்ளது. இதேவேளை அனைத்துவிதமான சர்வதேச கால்பந்து போட்டிகளையும் தற்காலிகமாக இரத்து செய்வதற்கும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.