விளையாட்டு

அவுஸ்திரேலிய டென்னிஸ் முன்னணி வீரர்கள் காலிறுதியில்அவுஸ்திரேலிய  பகிரங்க டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு, செர்பியாவின் நோவக் ஜோகோவிச், செக். குடியரசு வீராங்கனை பெட்ரோ கிவிட்வோவா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டி மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.

மகளிர் ஒற்றையர் நான்காவது சுற்று ஆட்டத்தில் பெட்ரா கிவிட்டோவா, கிரீஸ் நாட்டை சேர்ந்த மரியா சகாரியாவை 6-7  6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றிகொண்டு காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்று ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச்  6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் ஆர்ஜன்டீன வீரர் டியாகோ ஷார்ட்ஸ் மென்னை தோற்கடித்தார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு நான்காவது ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர்  6-1, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ஹங்கேரியின் மார்ட்டன் பக்சோவிக்ஸை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.