விளையாட்டு

அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கிண்ண லீக் போட்டியில் இந்திய அணி, 36 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கட்டுகளை இழந்து ஓட்டங்களைப் 352 பெற்றது.

சிக்கார் தவான் 117 ஓட்டங்களையும், விராட் கோலி 82 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

அவுஸ்திரேலியா 353 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பாடி, 50 ஓவர்களில் 316 ஓட்டங்களை மட்டுமே பெற்று சகல விக்கட்டுகளையும் இழந்தது.

அவுஸ்திரேலியா சார்பாக ஸ்டீவ் சுமித் 69 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 56 ஓட்டங்களையும், அலெக்ஸ் கரே 55 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தனர்.

பும்ரா மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா 3 விக்கட்டுகளை வீழ்த்தினர்.