விளையாட்டு

அவுஸ்திரேலியாவுடன் மோதுகிறது மேற்கிந்திய தீவுகள்

 

உலகக்கிண்ண லீக் தொடரின் 10வது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இதில் மேற்கிந்திய தீவுகள் அவுஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடவுள்ளது.

இன்றைய போட்டியில் அவுஸ்திரேலியாவில் மாற்றங்கள் எதுவும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் மேற்கிந்திய தீவுகளில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணித்தலைவர் ஹொல்டரின் தகவல்படி, க்றிஸ் கெயில் விளையாடுவதில் சிக்கல் இல்லை.

எனினும் அன்றி ரசல் இன்று உடற்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னரே விளையாடுவாரா இல்லையா என்பது அறிவிக்கப்படும்.