விளையாட்டு

அவுஸ்திரேலியாவுடன் பகலிரவு போட்டியில் பங்கேற்கிறது இந்தியாஅவுஸ்திரேலியாவில் இந்த வருட இறுதியில்  இடம்பெறவுள்ள, டெஸ்ட் தொடரில் ஒரு ‘பகலிரவு’ போட்டியில் இந்திய அணி பங்கேற்கும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த போட்டி எந்த மைதானத்தில் இடம்பெறுமென்பதை பின்னர் அறிவிப்பதாகவும் கங்குலி தெரிவித்துள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு கிரிக்கெட் விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய அணியை, பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடுமாறு அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை  கோரிக்கை விடுத்திருந்தது.

எனினும் இந்திய வீரர்கள் அதற்கு மறுப்பு வெளியிட்டிருந்தனர்.

எவ்வாறெனினும் பங்களாதேஷ் அணியுடனான தனது முதலாவது பகலிரவு டெஸ்ட் போட்டியில்  இந்திய அணி வெற்றிபெற்றிருந்தது.

இந்நிலையில், இந்த அனுபவத்தின் அடிப்படையில், அவுஸ்திரேலிய அணியுடன் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இந்திய அணி இணக்கம் வெளியிட்டுள்ளது.