உலகம்

அவுஸ்திரேலியாவில் பொதுத்தேர்தல்

அவுஸ்திரேலியாவின் பொதுத்தேர்தல் இன்றும் நாளையும் இடம்பெறுகின்ற நிலையில், மக்கள் வாக்களிப்பில் கலந்துகொண்டுள்ளனர்.
ஒரு தசாப்த காலத்தில் அந்த நாட்டில் நான்கு பிரதமர்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்தல் இடம்பெறுகிறது.
முன்னாள் பிரதமர் மெல்கம் டேர்ன்புல் லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, ஸ்கொட் மொரிசன் அந்த பதவிக்கு நியமக்கபபட்டு 9 மாதங்கள் கடந்துள்ளன.
ஆளும் கூட்டு தேசிய கட்சியுடன் ஐக்கியத்துடன் இருப்பதாக ஸ்கொட் மொரிசன் அறிவித்துள்ளார்.
எனினும் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு மாறான கொள்கைகளை முன்வைத்துள்ள தொழில் கட்சியின் தலைவர் பில் சோர்ட்டன், அதிக வாய்ப்புள்ளவராக கருதப்படுகிறார்.
மேலும் இந்த தேர்தலில் அகதிகள் தொடர்பான விடயமும் முக்கிய இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2007ம் ஆண்டின் பின்னர் அவுஸ்திரேலியாவில் எந்த ஒரு பிரதமரும் தமது முழுமையான அதிகாரக் காலத்தை பூர்த்தி செய்ததில்லை.
3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கு தேர்தல் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.