உலகம்

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு – நால்வர் பலி

அவுஸ்திரேலியாவின் டர்வின் நகரில் துப்பாக்கிதாரி ஒருவர் வெவ்வேறு இடங்களில் நடத்திய துப்பாக்கித் தாக்குதலில் குறைந்த பட்சம் 4 பேர் உயிரிழந்தனர்.

மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

45 வயதான ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த தாக்குதல்களை அவர் தனித்து நடத்தி இருக்கலாம் என்று பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அதேநேரம் இந்த தாக்குதல் பயங்கரவாத தொடர்புடையது இல்லை என்று அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் அறிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறுவது மிக அரிது.

இறுதியாக 1996ம் ஆண்டு டாஸ்மானியா நகரில் நடத்தப்பட்ட இவ்வாறான துப்பாக்கித் தாக்குதல் சம்பவம் ஒன்றில் 35 பேர் கொல்லப்பட்டனர்.