உலகம்

அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் காலமானார்

அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமரும் தொழில்கட்சியின் தலைவருமான பொப் ஹவுக், தமது 89வது வயதில் காலமானார்.
1980ம் ஆண்டுகளில் அவர் அவுஸ்திரேலியாவின் அரசியலில் பெரும் ஆதிக்கத்தை செலுத்தினார்.
1983ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டு வரையில் பிரதமராக இருந்த அவர், நாட்டின் பொருளாதாரத்தை நவீனமயமாக்கியமைக்காக பெரிதும் புகழப்படுகிறார்.
அவுஸ்திரேலியாவின் அரசியல் தலைவர்களில் முன்னிலையாக கணிப்பிடப்பட்டவராகவும் அவர் இருந்தார்.
முதுமையில் அமைதியாக தமது வீட்டில் உயிர்நீத்ததாக அவரது குடும்பத்தார் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளனர்.