விளையாட்டு

அவிஸ்க குணவர்தனவை நீக்கிய சிறிலங்கா கிரிக்கட்

இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து அவிஸ்க குணர்வதன நீக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற 10க்கு10 கிரிக்கட் தொடரின் போது ஊழல் எதிர்ப்பு விதிகளை மீறியதாக அவர் மீதும், மற்றுமொரு இலங்கை முன்னாள் வீரரான நுவான் சொய்சா மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்தே அவிஸ்க குணவர்தனவின் பதவியை பறிக்க சிறிலங்கா கிரிக்கட் தீர்மானித்துள்ளது.