விளையாட்டு

அவிஸ்கவின் பதவிக்கு சமிந்த வாஸ்

இலங்கை வளர்ந்து வரும் இளையோர் கிரிக்கட் அணியின் பிரதான பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர் சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.
எதிர்வரும் தென்னாபிரிக்க – இலங்கை 19 வயதுக்கு உட்பட்டோருக்கான தொடரில் அவர் இளையோர் அணிக்கான பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார்.
இளையோர் அணிக்கான பயிற்றுவிப்பாளராக இருந்த அவிஸ்க குணவர்தன, 2017 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு ராட்சியத்தில் நடைபெற்ற ரி10 லீக் போட்டிகளின் போது ஒழுக்க விதிகளை மீறியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அவர் இந்த பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அவரது பதவிக்கு சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.