Breaking News

அழகரத்னம் மனோரஞ்சனுக்கு பிணை

கடந்த அரசாங்கத்தின் போது இடம்பெயர்ந்தோரை மீள பதிவு செய்யும் வேலைத்திட்டத்தின் கணக்காளர் அலகரத்னம் மனோரஞ்சன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 3 மாத காலமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஒரு இலட்சம் ரூபா ரொக்கப்பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணைகள் இரண்டின் அடிப்படையில் இவரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த பெர்ணான்டோ உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு எதிர்வரும் மார்ச் மாதம் 27 ஆம் திகதி மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.