அளுத்கம பொலிஸ் நிலையத்தில் 5 அதிகாரிகளுக்கு கொரோனா
அளுத்கம பொலிஸ் நிலையத்தில் 5 அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, அவர்களுடன் தொடர்பில் இருந்த 12 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கம்புறுபிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவருடன் சேவையாற்றிய 65 பொலிஸ் அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.