இலங்கை

அலுகோசு பதவியை எதிர்பார்க்கும் பட்டதாரி !

மரணதண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கான முதற்கட்ட தேர்வு இன்று நடைபெற்றபோது பட்டதாரி ஒருவரும் நேர்முகத்திற்கு வந்திருந்ததாக சொல்லப்படுகிறது .

இந்தப் பதவிக்கு கிடைக்கப் பெற்ற 102 விண்ணப்பங்களில் 79 விண்ணப்பங்கள் மட்டும் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டுள்ளன. முதலில் மனநல பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் விண்ணப்பதாரிகளில் இருவர் மட்டும் தெரிவு செய்யப்படுவார்கள். இன்று நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்ட 39 பேரில் 19 பேர் மட்டுமே வருகை தந்திருந்தனர்.க.பொ .த .சாதாரண தர மற்றும் உயர்தரத்தில் சித்தியடைந்தவர்களும் இதில் அடங்குவர்
நாளை 40 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.