Breaking News

அலுகோசு பதவிக்கு இருவர் தெரிவு !

தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்கு இருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர்களுக்கு இரண்டு வாரங்கள் அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதுடன் , எந்த நேரத்திலும் தூக்கிலுடும் பணியை நிறைவேற்ற அவர்கள் தயாராக உள்ளதாக சொல்லப்படுகிறது.

இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்ட மொத்தம் 26 விண்ணப்பதாரிகளின் தகுதி மற்றும் அவர்களின் தகுதி புள்ளிவிபரங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து – பொருத்தமான இரண்டு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் ஏற்கனவே இரண்டு வார அடிப்படை பயிற்சிக்கு உட்பட்டுள்ளதுடன் ,மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று அறியப்படுகிறது.

ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இருவரின் அடையாளத்தை எந்த ஊடகத்திற்கும் வெளிப்படுத்தாதிருக்க சிறை அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.