Breaking News

அர்ஜுன் மகேந்திரனை நாடுகடத்தும் கோரிக்கை அந்நாட்டு அரசிடம் முன்வைக்கப்பட்டது

 

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடுகடத்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை சிங்கப்பூரிலுள்ள இலங்கை தூதரகம் அந்நாட்டு அரசிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைத்தது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பான வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட மகேந்திரனை இலங்கைக்கு அனுப்புமாறு ஜனாதிபதி மைத்ரியும், தனிப்பட்ட ரீதியில் சிங்கப்பூர் பிரதமரிடம் முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.