Breaking News

அர்ஜுன் மகேந்திரனுக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை

சிங்கப்பூரில் உள்ளதாக சந்தேகப்படும் அர்ஜுன் மகேந்திரனுக்கு பிடியாணை பிறப்பிக்குமாறு விசேட மேல்நீதிமன்றில் இன்று சட்டமா அதிபர் கோரிக்கை முன்வைத்தார்.

அது குறித்த முடிவை 24ஆம் திகதி அறிவிப்பதாக உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

அதேநேரம் பிணைமுறி மோசடி வழக்கில் பெர்ப்பச்சுவல் ட்றசரிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஜெஃப்ரி அலோசியஸ் உட்பட ஏழு பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அவர்கள் அனைவருக்கும் இன்று நீதிமன்றம் பிணை வழங்கியது.