விளையாட்டு

அரையிறுதி வாய்ப்பை இழந்த இரண்டாம் அணி

 

உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் லீக் போட்டிகள் இறுதி கட்டத்தை அண்மித்துள்ளன.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா தோல்வியை சந்தித்தநிலையில், அது இந்த தொடரின் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பினை இழந்துள்ளது.

தற்போது வரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்கா ஒரு வெற்றியுடன் மொத்தமாக 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

இன்னும் 2 போட்டிகள் மீதம் உள்ளநிலையில், அவை இரண்டிலும் வெற்றி பெற்றாலும் மொத்தமாக 7 புள்ளிகளை மாத்திரமே பெற முடியும்.

எனவே, முன்னணியில் உள்ள 4 அணிகளும் 8 புள்ளிகளுக்கும் அதிக புள்ளிகளைக் கொண்டுள்ள நிலையில், தென்னாப்பிரிக்காவினால் இனி அரையிறுதிக்கு தகுதி பெற முடியாது.

அதேபோன்று ஆப்கானிஸ்தான் அணியும் 6 போட்டிகளில் விளையாடி 6லும் தோல்வியுற்று புள்ளிகள் எதனையும் பெறாதநிலையில், அந்த அணியாலும் அரையிறுதிக்கு தகுதிபெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும் ஏனைய அணிகளுக்கு வாய்ப்புகள் இன்னும் உள்ளன.