விளையாட்டு

அரையிறுதிக்கு முன்னேறிய தீம் – வெளியேறிய ஃபெடரர்

மெட்ரிட் பகிரங்க தொடரின் ஊடாக டென்னிஸ் களிமண் தரைப் போட்டிகளில் ரொஜர் ஃபெடரர் மீள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் அதனை முறியடித்த டொமினிக் தீம், ஃபெடரரை 3-6 7-6 (13-11) 6-4  என்ற செட் கணக்கில் தோற்கடித்து தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
அவர் அரையிறுதியில் உலகின் முதல்தர வீரரான நவோக் ஜொக்கோவிக்குடன் இன்று ஆடவுள்ளார்.
ஏற்கனவே சுவிட்சர்லாந்தின் ஸ்தான் வவ்ரிங்காவை 6-1 6-2  என்ற செட் கணக்கில் தோற்கடித்த ரஃபாயல் நடேல், அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.