விளையாட்டு

அரையிறுதிக்கு இலகுவாக தகுதி பெற்றார் செரீனா

 

செரீனா வில்லியம்ஸ், சீனாவின் வாங் கியாங்கை காலிறுதியில் தோற்கடித்து,  அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில், அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

அமெரிக்க டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் இன்று பதிவு செய்த வெற்றியானது, அமெரிக்க  பகிரங்க டென்னிஸ் தொடரில் அவர் பெற்ற 100ஆவது வெற்றியாக பதிவாகியுள்ளது.

செரீனா வில்லியம்ஸ் மற்றும் வாங் கியாங்கிற்கு இடையிலான அரையிறுதி ஆட்டம், வெறும் 44 நிமிடங்கள் மாத்திரமே நீடித்தது.

மிகச் சிறப்பாக ஆடிய வில்லியம்ஸ், 6 – 1, 6 – 0 என்ற நேர் செட்களில் வெற்றியை பெற்றார்.

இந்த வெற்றியுடன் அரையிறுதியில் செரீனா, உக்ரைனின் எலினா விட்லோனாவை சந்திக்கவுள்ளார்.

இந்தத் தொடரில் செரீனா பட்டம் வெல்லும் பட்சத்தில், இது செரீனாவின் 24ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமையுமென்பது குறிப்பிடத்தக்கது.