Breaking News

அரச புலனாய்வுத்துறை தலைவர் நாளை தெரிவுக்குழுவுக்கு – பிரதமரும் விரைவில்..!

 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் அரச புலனய்வுத்துறை தலைவர் – பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன நாளை ஆஜராகவுள்ளார்.

அதேபோல சி ஐ டி மற்றும் ரி ஐ டி சிரேஷ்ட அதிகாரிகள் சிலரும் நாளை தெரிவுக்குழு முன் ஆஜராகவுள்ளனர்.

முன்னதாக – தெரிவுக்குழு முன் பாதுகாப்பு அதிகாரிகள் வரமாட்டார்களென ஜனாதிபதி தெரிவித்திருந்தார். பாதுகாப்பு அதிகாரிகள் தேசிய பாதுகாப்பு விடயங்களை கூறும்போது ஊடகங்களை வெளியேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதேவேளை பிரதமர் ரணில் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராக விருப்பத்தை வெளியிட்டுள்ளார். தெரிவுக்குழு அழைக்குமாயின் சென்று பல விடயங்களை தெரிவிக்க பிரதமர் தயாரென அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறின.