இலங்கை

அரச தலைவர் கொலைச் சதிகாரரென மதுஷை கருதியது டுபாய் – விசேட பாதுகாப்புடன் அனுப்புகிறது !

டுபாயில் இருந்துகொண்டு அரச தலைவர் ஒருவரை கொலை செய்ய சதிவேலைகளை செய்த காரணத்திற்காக மாக்கந்துர மதுஷ் விடுத்த மன்னிப்பு வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளாதிருக்க டுபாய் அரசு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதனால் டுபாயில் இருந்து விசேட பாதுகாப்புடன் அடுத்த வாரம் இலங்கைக்கு நாடுகடத்தப்படுகிறார் மதுஷ் .

முன்னதாக கடந்த வாரம் டுபாய் சென்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன அங்கு உயர்மட்ட பேச்சுக்களை நடத்தியிருந்தார். ஜனாதிபதியின் விசேட கடிதம் ஒன்றையும் அவர் எடுத்து சென்றிருந்தார்.

இலங்கை அரச தலைவரான ஜனாதிபதியை கொலை செய்ய சதி செய்த குற்றச்சாட்டு ஆதாரத்துடன் மதுஷ் மீது உள்ளதால் அவரை இலங்கையிடம் ஒப்படைக்கும்படி அமைச்சர் மாரப்பன வேண்டுகோள் விடுத்ததாகவும் அந்த அடிப்படையில் அரச தலைவர் ஒருவரை கொலை செய்ய சதி தீட்டும் தளமாக டுபாய் இருந்துவிட்ட நிலைமை வந்துவிடக் கூடாதென்பதால் மதுஷை இலங்கைக்கு அனுப்ப அந்நாட்டு அரசு முடிவு செய்ததாவும் தெரிகிறது.

மதுஷ் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டால் டுபாயில் அவரின் குடும்பத்தினர் தொடர்ந்து இருக்க அனுமதி வழங்குவதா இல்லையா என்பது குறித்தும் டுபாய் அரசு ஆராய்ந்து வருவதாக சொல்லப்படுகிறது.