அரச ஊழியரான பெண்ணை தாக்கிய பொறியியலாளர் கைது !
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் உடுகம்பொல அலுவலகத்தில் பணியாற்றும் பெண்ணொருவரை தாக்கிய அதிகாரசபையின் பொறியியலாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று காலை இந்த பிரச்சினை சம்பந்தமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் கேள்வியெழுப்பினார்.அதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா ,இந்த விடயம் பாரதூரமென்பதால் மேற்படி பெண் முறைப்பாடு செய்யாமல் கூட பொலிஸார் அந்த பொறியியலாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாமென தெரிவித்தார்.
தொலைபேசி இலக்கமொன்றை கோரி மேற்படி பெண்ணை பொறியியலாளர் தாக்கிய விடியோ சமூக ஊடகங்களில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.