உஷ்... இது இரகசியம் !

உஷ். இது இரகசியம் ! – அரச ஊடக நிறுவனத்தில் இழுபறி !

 

அரச ஒளிபரப்பு நிலையம் ஒன்றின் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளதாம்..

நிறுவகம் நட்டமாக இயங்குவதால் இந்த நிலைமை என்று சொல்லப்பட்டாலும் காரணம் அது இல்லையாம்.

ஊதியம் வழங்க பொறுப்பான அமைச்சை கேட்டாலும் உரிய பதில் இல்லாத காரணத்தினால் ஊழியர்களின் சம்பளம் வழங்குவதில் இழுபறி தொடர்கிறது.

“ நிறுவனத் தலைவர் ஜனாதிபதிக்கு நெருக்கமானவர் தானே.அப்போ ஜனாதிபதியிடமே கேட்டுக்கொள்ளுங்கள் என அமைச்சு மட்டத்தில் சொல்லப்படுகிறதாம்.இது ஜனாதிபதியின் காதுகளுக்கும் சென்றுள்ளதால் விடயம் பூதாகரமாகியுள்ளது