உஷ்... இது இரகசியம் !

அரச ஊடகம் ஒன்றை சுவீகரிக்கவுள்ள மைத்திரி

 

தற்போது ஊடகத்துறை அமைச்சின் கீழ் உள்ள இலத்திரனியல் ஊடகம் ஒன்றை ஜனாதிபதி தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் அந்த ஊடகம் ஜனாதிபதி தொடர்பாக வெளியிட்ட செய்தி ஒன்று தொடர்பில் அவர் அதிருப்தியில் உள்ளார்.

இதற்காக அந்த ஊடகத்தின் பிரதானியை அண்மையில் அழைத்து கடுமையாக எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த செய்தி குறித்த விசாரணைக்காக அவர் அந்த ஊடகத்தை தமது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் எண்ணத்தில் உள்ளார்.