இலங்கை

அரச இயந்திரம் ஸ்தம்பிதம் – ஜனாதிபதியை கடுமையாகச் சாடினார் சம்பிக்க

 

அமைச்சரவையை கூட்டாமல் நாட்டின் அரச இயந்திரத்தை ஸ்தம்பிதமடைய செய்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்.கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் கூறியதாவது,

107 அமைச்சரவை பத்திரங்கள் ஆராயப்பட வேண்டும்.ஆனால் அமைச்சரவையை கூட்டாமல் அரச இயந்திரத்தை முடக்கியுள்ள ஜனாதிபதி ,நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணையையும் மீறியுள்ளார்.இது அப்பட்டமான அரசியலமைப்பு மீறல்.அத்துடன் பாராளுமன்றத்தை சவாலுக்கு உட்படுத்தும் செயல்..பாராளுமன்ற தெரிவுக்குழுவை ஜனாதிபதி நினைத்தபடி முடியாது.தேசிய பாதுகாப்பு குறித்து அதில் ஆராயப்பட வேண்டும்.

கடந்த ஒக்ரோபர் 26 இல் நடந்த அரசியலமைப்பு மீறலால் ஏற்பட்ட பாதிப்பு போல ,அண்மையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களால் ஏற்பட்ட பாதிப்புக்களை போல இப்போதும் பெரிய பாதிப்பு இதனால் வரப்போகிறது.இவ்வார முடிவுக்குள் அனைத்து தரப்பும் பேச்சு நடத்தி அடுத்த வாரம் அமைச்சரவையை கூட்ட வேண்டும்.அனைத்து தரப்பினரும் இந்த ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாட்டை கண்டிக்க வேண்டும். மீண்டும் அரசியலமைப்பினை மீறி செயற்படவேண்டாமென நான் ஜனாதிபதியிடம் கேட்கிறேன்.

-என்றார் அமைச்சர் சம்பிக்க