இலங்கை

அரசுக்கு நாளை நண்பகல் வரை இறுதி காலக்கெடு – ஞானசார தேரர் பரபரப்பு அறிவிப்பு !

 

அமைச்சர் ரிசார்ட் ஆளுநர்மார் ஹிஸ்புல்லாஹ் , அசாத் சாலி ஆகியோரை பதவி நீக்கம் செய்ய நாளை நன்பகல் 12 மணி வரை அரசுக்கு காலக்கெடு வழங்குவதாக ஞானசார தேரர் அறிவித்துள்ளார்.

உண்ணாவிரதமிருக்கும் ரத்தன தேரரை இன்று காலை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , காலக்கெடுவுக்குள் இது நடக்காதபட்சத்தில் அனைத்து பிக்குமாரும் களத்தில் இறங்குவார்களென்றும் அவர் எச்சரித்துள்ளார்.

ரத்தன தேரருக்கு ஆதரவை தெரிவித்து கண்டி நகரின் கடைகள் இன்று மூடப்பட்டன