Breaking News

அரசியல் செய்திக் குறிப்புகள் !

 

* எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று இரவு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கூட்டணித் தலைவர்கள் சந்தித்து பேசினர். ஜனாதிபதித் தேர்தலுக்கான விஞ்ஞாபனத்தை வரும் 25 ஆம் திகதி வெளியிடவும் அதற்கு முன்னர் 19 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலருக்குமிடையில் மற்றுமொரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.

* ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் குறித்து இன்று காலை அலரி மாளிகையில் கட்சித் தலைவர்களின் ஆளுங்கட்சியின் கூட்டமொன்று நடந்தது.அதில் தற்போதைய அரசியல் நிலைமை , தேர்தல் பிரசார நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.சில இடங்களில் தேர்தல் பிரசார செயற்பாடுகளில் ஒருங்கிணைப்பு முறையாக நடக்காமை குறித்து இங்கு சுட்டிக்காட்டினர் .

* யாழ்ப்பாணத்தில் பிரதமர் ரணில் இன்று தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்திக்கவுள்ளார்.

* எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கு மாகாணத்திற்கு பூத் ஏஜென்ட் என சொல்லப்படும் வாக்கு கணக்கிடும் நிலைய பிரதிநிதிகள் நியமனம் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிற்கிடையே சர்ச்சை எழுந்துள்ளதால் அவற்றை தீர்த்துவைக்க ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்கள் நீண்ட பேச்சு.அமைச்சர் றிஷார்ட் இதுவிடயத்தில் கடும் நிலைப்பாட்டில் இருப்பதாக தகவல்.

* கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் உள்ளூராட்சி மன்ற தலைவர் ஒருவரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்.அடுத்த வாரம் கிழக்கில் நடக்கும் கூட்டமொன்றில் அவர்கள் மேடையேறவுள்ளனரென சொல்லப்படுகிறது.

* ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 95 வீதமானோர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இப்போதைய முடிவை ஏற்கவில்லையென்றும் அவர்கள் மஹிந்த தரப்பை ஆதரிக்கவில்லையென்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தெரிவித்துள்ளார்.