Breaking News

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நாளை பேச்சு !

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் அல்லது அக்கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நாளை பேச்சு நடத்தவுள்ளார்.

நாளை காலை 10 மணிக்கு தேர்தல் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறும்.

ஜனாதிபதித் தேர்தல் குறித்தும் அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் இதன்போது தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் விளக்கமளிக்கவுள்ளார்.