Breaking News

“அரசியலில் எனது கதை முடியவில்லை – மீண்டும் வருவேன்..” – மைத்ரி அதிரடி !

“ 2014 ஆம் ஆண்டு ராஜபக்சவை விட்டு நான் வெளியேறும்போது கருங்கல்லில் மோதினீர்களே என்று எனது ஊரில் கூறினார்கள்.ஆனால் எனக்கு அதைப்பற்றி கவலை அச்சம் இல்லை. இப்போதும் எனது பதவிக்காலம் முடிந்தவுடன் என் கதை முடிந்துவிட்டதாக சிலர் நினைக்கின்றனர். இல்லை நான் மீண்டும் அரசியலுக்கு வருவேன்.கூடுதல் அவமானங்களை சந்தித்தவர் புத்தர். இயேசுவை சிலுவையில் அறைந்தனர் . தாமரை மொட்டு கொடுத்து காந்தியை சுட்டார் கோட்ஸே.அநீதி செய்பவர்கள் வாழலாம். ஆனால் நீதிக்காக போராடும் ஒருவனாக நான் வருவேன்..”

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால பொலநறுவையில் சற்று முன் நடந்த கூட்டமொன்றில் பேசும்போது குறிப்பிட்டார்.