இலங்கை

அரசியலமைப்பு கவுன்சிலுக்கு சம்பந்தன் – பட்ஜெட் ஆதரவுக்கு ரணிலின் ஆறுதல் பரிசு !

சமல் ராஜபக்ச எம் பி விலகியதையடுத்து ஏற்பட்ட அரசிலமைப்பு கவுன்சில் உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக இந்தப் பதவிக்கு டக்ளஸ் தேவானந்தா எம் பியை நியமிக்க எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த சிபாரிசு செய்திருந்த போதிலும் பிரதமர் ரணிலின் வேண்டுகோளுக்கமைய சம்பந்தன் நியமிக்கப்பட்டதாக தகவல்.

ரணிலின் இந்த வேண்டுகோள் குறித்து மஹிந்த – டக்ளஸ் எம் பியிடம் கூறியதாகவும் அதன் பின்னர் ரணிலே நேரடியாக டக்ளஸ் எம் பியிடம் இதுபற்றி கூறி அவரின் சம்மதத்தை பெற முயன்றதாகவும் அறியவந்தது.

பல வாரங்களாக இருந்த இழுபறி நிலைமை நீங்கி இப்போது கவுன்சிலின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் சம்பந்தன்.

பிரதமர் ரணிலின் வேண்டுகோளுக்கமைய இன்றைய பட்ஜெட் இறுதி வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுக்கு ஆதரவை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.