இலங்கை

அரசின் பொறுப்புக்களில் இருந்து விலகினார்கள் முஸ்லிம் அரசியல்வாதிகள் ! (விடியோ இணைப்பு )

அரசில் இருந்து அமைச்சர்கள் – இராஜாங்க அமைச்சர்கள் -பிரதியமைச்சர்கள் போன்ற அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் இன்று விலகினார்கள்.

அலரி மாளிகையில் கூட்டாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் இதனை அறிவித்தனர்.

இங்கு கருத்து வெளியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் , தற்போதைய நிலைகருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார்.

விசாரணைகளை நடத்தி தீவிரவாதத்திற்கு உதவியவர்கள் யாராவது இருப்பின் அவர்களுக்குரிய தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அப்பாவி மக்கள் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாமென்றும் அவர் குறிப்பிட்டார்.

இங்கு கருத்து வெளியிட்ட கபீர் ஹாசிம் , நியாயமான விசாரணைகளுக்கு இடமளித்து இந்த பதவிகளை விட்டு வெளியேறியுள்ளதாக குறிப்பிட்டார்.