இலங்கை

அரசாங்கத்துக்கு எதிராக ஜேவிபி நம்பிக்கையில்லா பிரேரணை

பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராக ஜேவிபி நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரவுள்ளது.

பயங்கரவாத தாக்குதல் இடம்பெறவுள்ளதாக முன்கூட்டியே தகவல் கிடைத்தும் அரசாங்கத்தினால் அதனை முறியடிக்க முடியிவில்லை.

அத்துடன் நாட்டில் இடம்பெறும் அடிப்படைவாத செயற்பாடுகளை தடுப்பதற்கான இயலுமையும் அரசாங்கத்திடம் இல்லை.

எனவே இந்த அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மத்திய செயற்குழு வரும் 21ம் திகதி கூடும் போது, இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பிமல் ரத்நாயக்க எம்.பி. கூறினார்.