இலங்கை

அமைச்சுப் பதவியை ஏற்குமாறு கபீர் ஹாஷிமிடம் சஜித் கோரிக்கை !

அமைச்சுப் பதவியை மீண்டும் ஏற்று மக்களுக்கான சேவையை ஆற்ற முன்வருமாறு அமைச்சர் சஜித் பிரேமதாச , கபீர் ஹாசிம் எம் பியிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள சஜித் , கபீர் ஹாசிம் போன்ற ஒருவரின் சேவை இப்போதைய நிலையில் தேவையென்றும் வலியுறுத்தியுள்ளார்.