இலங்கை

அமைச்சர் ரிஷார்ட் பதவி விலக வேண்டும் – இராஜாங்க அமைச்சர் நிரோஷன்

 

அமைச்சர் ரிஷார்ட் பதியுதீன் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவேண்டுமென இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் , அண்மைய ஈஸ்ரர் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் முடியும்வரை அமைச்சர் ரிஷார்ட் பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

” அமைச்சுப் பதவியை அவர் இராஜினாமா செய்யாத பட்சத்தில் அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நான் உட்பட பலர் ஆதரவளிக்கவுள்ளோம்.இது எங்களின் தனிப்பட்ட முடிவு ” என்றும் குறிப்பிட்டார் நிரோஷன் பெரேரா.