இலங்கை

அமைச்சர் ரிஷார்ட்டை எதிர்க்கத் தீர்மானித்தது சுதந்திரக் கட்சி

 

அமைச்சர் ரிஷார்ட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெறும் கட்சியின் உயர்மட்டக் கூட்டத்தில் இது இறுதி செய்யப்படுமென்று கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி கொண்டுவந்துள்ள இந்த பிரேரணைக்கு ஆதரவை வழங்காத பட்சத்தில் அதனை வைத்து அரசியல் ரீதியான எதிர்வினையை எதிர்க்கட்சி ஆற்றலாம் என்பதால் பிரேரணைக்கு ஆதரவை வழங்க வேண்டிய கட்டாய நிலையில் இருப்பதாகவும் அந்த உறுப்பினர் குறிப்பிட்டார்.

இதேவேளை இந்த பிரேரணைக்கு ஆதரவை வழங்கக் கூடாதென்ற நிலைப்பாட்டில் இருக்கும் ஜனாதிபதி மைத்ரி , எம் பிக்கள் தமது மனச்சாட்சியின்படி வாக்களிக்கலாமென சொல்லக் கூடுமென அறியமுடிந்தது.