இலங்கை

அமைச்சர் ரிஷார்ட்டுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை !

அமைச்சர் ரிஷார்ட் பதியுதீனுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையொன்றை கொண்டுவர கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு உதவியதாக கூறும் 11 குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இந்த பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாகவும் அதற்கான பேச்சுக்கள் நடந்து முடிந்திருப்பதாகவும் எதிர்க்கட்சி பேச்சாளர் ஒருவர் கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியின் இந்த யோசனைக்கு ஏலவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளதாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே வி பி ஆகிய கட்சிகளின் ஆதரவை பெற பேச்சு நடத்தப்படவுள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் சொல்லப்பட்டுள்ளது