இலங்கை

அமைச்சர் மனோ கணேசன் பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு சென்றார் !

 

-வன்னி செய்தியாளர் –

இந்து சமய அலுவல்கள் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் ,சர்ச்சைக்குரிய முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்துக்கு சென்றார்.

இன்றைய தினம் திருகோணமலை கன்னியா பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்காக திருகோணமலை சென்ற அமைச்சர் அவ் வீதி வழியாக முல்லைத்தீவுக்கு பயணித்து பழைய செம்மலை பகுதியில் அமைந்துள்ள நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு சென்றார்

பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் பௌத்த பிக்கு ஒருவர் அடாத்தாக பௌத்த விகாரை ஒன்றை அமைத்து புத்தர் சிலை ஒன்றையும் அமைந்துள்ளள்ளார். இந்த விவகாரம் தொடர்பான வழக்கு கடந்த சில மாதங்களாக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த மே மாதம் ஆறாம் திகதி இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது .இந்த நிலையில் இந்த ஆலய விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்காக இன்றைய தினம் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான குழுவினர் மற்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் உள்ளிட்டோர் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினருடன் இணைந்து பிள்ளையார் ஆலயத்தை பார்வையிட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.அதனை தொடர்ந்து தற்போது இரு ஆலய தரப்பினருடனும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றார்.