Breaking News

”அமைச்சர் ஆளணியில் உறவினர்கள் நியமனம் கூடாது ” – ஜனாதிபதி உத்தரவு !

 

அமைச்சர்மார் அல்லது இராஜாங்க அமைச்சர்மார் தமது ஆளணி நியமனத்தின்போது உறவினர்களை நியமிக்கக் கூடாதென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

முன்னதாக அமைச்சர்மார் தமது அலுவலக ஆளணி நியமனத்தின்போது உறவினர்களுக்கு முன்னுரிமை வழங்கியிருந்தனர்.அமைச்சரின் தனிப்பட்ட செயலாளராக அவரது மனைவி அல்லது பிள்ளைகளை நியமிக்கும் ஏற்பாடுகளே இருந்தன.

ஆனால் இந்த நடைமுறை இனி தொடரக் கூடாதென உத்தரவிட்டுள்ள ஜனாதிபதி, அமைச்சருக்கும் ஆலோசகர் பதவியில் ஒருவரை மட்டுமே நியமிக்க முடியுமென திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.