இலங்கை

அமைச்சரவை கூட்டத்தை பகிஷ்கரிக்கும் மைத்ரி – மின்வெட்டு குறித்து நேற்று கெபினெட்டில் எகிறினார் !

“பொது வசதிகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை மின்சார சபைகளுக்கிடையில் நிலவும் முரண்பாடு தீரும்வரை கெபினெட் கூட்டத்திற்கு நான் வரமாட்டேன். பிரதமர் என்ன செய்கிறீர்கள் ? ஆட்சியா நடக்கிறது ?”

இவ்வாறு நேற்று அமைச்சரவை கூட்டத்தில் கடுந்தொனியில் கருத்து வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி மைத்ரி.

நேற்று அமைச்சரவை கூட்டம் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடந்தது. அங்கு சென்று கூட்டத்தை நடத்திய ஜனாதிபதி மைத்ரி மின்வெட்டு குறித்து கடுமையாக எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

பொதுவசதிகள் ஆணைக்குழுவானது இன்னொரு அரச நிறுவனமான மின்சாரசபைக்கு எதிராக நீதிமன்றம் செல்கிறது. இது சரிதானா? ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் முறைகேடுகள் குறித்து நான் கூறினாலும் அதற்கெதிராக எந்த நடவடிக்கையும் இல்லை. உடனடியாக இதற்கு ஒரு முடிவை எடுங்கள். அல்லது இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவை எடுக்கும் வரை நான் அமைச்சரவை கூட்டத்திற்கு வரமாட்டேன்…”

இப்படி கடுமையாக கருத்து வெளியிட்டுள்ளார் ஜனாதிபதி..