உலகம்

அமெரிக்க விமான தளங்கள் மீது தாக்குதல்ஈராக்கில் உள்ள அமெரிக்க விமான தளங்கள் மீது இஸ்லாமிய புரட்சிகர படைகள் 14ற்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரப் படையின் தளபதி குவாசிம் சுலைமானியை அமெரிக்க படைகள் கொலை செய்தமைக்கு பதிலடி தரும் விதத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ஈராக்கில் அமெரிக்க துருப்புக்கள் வசிக்கும்  தளங்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.

இர்பில் மற்றும் அல் அசாத் ஆகிய இடங்களில் குறைந்தது இரண்டு தளங்கள் தாக்கப்பட்டதாக பென்டகன் கூறியுள்ளது.