உலகம்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்தது வன்முறை அல்ல- டிரம்ப் தகவல்

தன்னை பதவியிலிருந்து நீக்கக் கோரும் கோரிக்கைகள் அபத்தமானது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் பைடனின் வெற்றியைப் பொறுத்துக் கொள்ளமுடியாத டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் வன்முறையில் ஈடுபட்டனர். ஆனால் நாடாளுமன்றத்தில் குழப்பமான நிலை ஏற்பட்டதாகவும், அதில் வன்முறை எதுவும் நடக்கவில்லை என டிரம்ப் கூறியதாக தி ஹில் பத்திரிகை செய்தி வெளியிட்டது.

இந்நிலையில் நாடாளுமன்ற வன்முறை காரணமாக டிரம்ப்பை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்கட்சிகள் கோரி வரும் நிலையில், அந்தக் கோரிக்கை அபத்தமானது என அவர் தெரிவித்துள்ளார்.