Breaking News

அமெரிக்க தூதரக இராஜதந்திரி பி சி ஆர் பரிசோதனையின்றி நாட்டுக்குள் பிரவேசம்

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திர அதிகாரி ஒருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில்​ பி சி ஆர் பரிசோதனை செய்துகொள்ளாமல் நாட்டிற்குள் பிரவேசித்துள்ளார்.

சுமார் நான்கு மணித்தியாலம் விமான நிலையத்தில் அவர் தடுத்துவைக்கப்பட்டாலும் இராஜதந்திர சிறப்புரிமையின் கீழ் பரிசோதனையை மேற்கொள்ளாது அவர் வெளியேற அனுமதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது.

கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் தூதரக அதிகாரி இன்று அதிகாலை 1.30 அளவில் கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்தார்.இராஜதந்திரிகள் தொடர்பில் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படாத காரணத்தினால் அவரை தொடர்ந்து தடுத்து வைக்க முடியாத நிலை அதிகாரிகளுக்கு ஏற்பட்டது.

எவ்வாறாயினும் அவர் சுயதனிமைப்படுத்தலின் பின்னரே கடமைக்குத் திரும்புவாரென கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் கூறின.