உலகம்

அமெரிக்க  கடற்படை படகுகளுக்கு சீனா தடைஹொங்கொங்கில் இடம்பெறும் ஜனநாயக மீட்பு போராட்டங்களுக்கு ஆதரவு வழங்குவதை அமெரிக்கா சட்டபூர்வமாக்கியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹொங்கொங் கடற்பரப்பில் அமெரிக்க கடற்படை படகுகள் பயணிப்பதற்கு சீனா தடை விதித்துள்ளது.

இந்த முடிவு குறித்து அறிவித்த சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், ஹொங்கொங் தொடர்பாக அமெரிக்கா எடுத்த நடவடிக்கைக்கு எதிராக இந்த தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஹொங்கொங்கின் ஜனநாயக மீட்புப் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஒரு சட்ட ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி கையொப்பமிட்ட நகர்வு ஹொங்கொங் போராட்டக்காரர்களுக்கு பெரும் உற்சாகத்தை வழங்கியிருந்தது.

மனித உரிமை மற்றும் ஜனநாயகம் தொடர்பான இந்த சட்ட ஆவணத்தில் அமெரிக்க ஜனபாதிபதி கையொப்பமிட்டமை சீனாவை கடும் விசனத்துக்கும் உள்ளாக்கியிருந்தது.

இதுத் தொடர்பில் கருத்து வெளியிட்ட, குறித்த சட்டத்தை ஆதரிக்கும் போராட்டக்காரர்களில் ஒருவரான, சன்னி சியுங் “அமெரிக்க காங்கிரஸ் மற்றும் ஜனாதிபதி ட்ரம்பிற்கு நன்றி தெரிவிப்பதற்காகவே இந்த பேரணியை நடத்துகின்றோம்.’ எனத் தெரிவித்தpருந்தமை குறிப்பிடத்தக்கது.