உலகம்

அமெரிக்கா – மெக்சிகோ இணக்கம்

 

சட்டவிரோத குடியேறிகள் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதை தடுப்பதற்கு அதிகபட்ச நடவடிக்கைகளை எடுப்பதற்கு மெக்சிகோ இணக்கம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து மெக்சிகோவின் ஏற்றுமதி பொருட்களுக்கு விதிக்கப்படவிருந்த வரி அதிகரிப்பை ரத்து செய்வதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

மெக்சிகோ ஊடாக அதிகபடியான சட்டவிரோத குடியேறிகள் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்கின்ற நிலையில், அவர்களை தடுக்க மெக்சிகோ கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தி இருந்தார்.

இதன்படி மாதாந்தம் 5 சதவீதப்படி வரி அதிகரிப்பை விதிக்கவிருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.

இதுதொடர்பில் மெக்சிகோவின் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைகளின் படி அதற்கு இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது.