விளையாட்டு

அமெரிக்கா முதலிடத்தில்; கென்யாவிற்கு ஐந்து தங்கம் 

 

பதினேழாவது, உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கப்பட்டியலில் வழமைபோல் அமெரிக்கா முதலிடத்தைப் பெற்றுள்ளது.

கட்டார் தலைநகர் தோஹாவில்  கடந்த 27ஆம் திகதி முதல் நேற்றைய தினம் வரை 10 நாட்களாக இந்தப் போட்டி இடம்பெற்றது.

 அமெரிக்கா 14  தங்கம், 11  வெள்ளி மற்றும் 4 வெண்கலங்கள் அடங்களாக 29 பதக்கங்களைப் பெற்று  முதலிடத்தைப் பெற்றுள்ளது.

அமெரிக்காவின் குறுந்தூர ஓட்டவீரர், கிறிஸ்டியன் கொலமன் எதிர்பார்த்ததைப்போல் 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்றதோடு, நோஹா லயில்ஸ் 200 மீற்றர் ஓட்டப்போட்டியில், டொனாவின் ப்ரெசியர் 800 மீற்றர்  ஓட்டப்போட்டியில்  அமெரிக்கா சார்பில் தங்கப்பதக்தைப் பெற்றுக்கொண்டனர்.

இதன் மூலம் அவர் உலகின் வேகமான மனிதர் என்ற சாதனையையும் படைத்தார். இதற்கு முன்னர் இந்த சாதனை பல வருடங்களாக ஜமைக்காவின் உசைன் போல்ட் வசம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், பெண்களுக்கான 100 மற்றும் 400 மீற்றர் தடைத்தாண்டல் ஓட்டம், 4 தர 400 அஞ்சலோட்டம் ஆகியவற்றிலும் அமெரிக்கா தங்கப்பதக்கத்தைப் பெற்றுக்கொண்டது.

இதேவேளை, கென்னியா 5 தங்கம், 2  வெள்ளி மற்றும் 4 வெண்கலங்கள் உள்ளடங்களாக 11  பதக்கங்களைப் பெற்று பதக்கப்பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.

வழமைப்போல் கென்னியா, நெடுந்தூர ஓட்டப்போட்டியில் பதக்கங்களை அள்ளியது.

ஆண்களுக்கான 1,500 மீற்றர், 3,000 மீற்றர் பல தடை ஓட்டம் பெண்களுக்கான 5,000 மீற்றர், மரதன் மற்றும் 3,000 மீற்றர் பல தடை ஓட்டம் ஆகிய போட்டிகளில் கென்னியா தங்கப்பதக்கங்களை பெற்றுக்கொண்டது.

ஜமைக்கா, 3 தங்கம் மற்றும் 5 வெள்ளி மற்றும் 4 வெண்கலங்கள் உள்ளடங்களாக 12  பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டது.

ஜமைக்கா, ஆண்களுக்கான நீளம் பாய்தல், பெண்களுக்கான 100 மீற்றர் மற்றும் 100 தர 400 மீற்றர் அஞ்சலோட்டம் ஆகியவற்றில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது ஜமைக்கா.

மேலும்,  31   நாடுகள் நடந்து முடிந்த பதினேழாவதுஇ உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஏதாவது ஒரு பதக்கத்தையேனும் பெற்றுள்ளன.

210 நாடுகளைச் சேர்ந்த, 1,900ற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் 10 நாட்களில் 24 போட்டிகளில் பங்கேற்றனர்.

கடந்த 2017ஆம் ஆண்டு, லண்டனில் இடம்பெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலும, 30 பதக்கங்களை வென்ற அமெரிக்கா பதக்கப்பட்டியலில் முதலிடத்தைப் பெற்றமை விசேட அம்சமாகும்.