இலங்கை

அமெரிக்கா செல்கிறார் மைத்ரி – உலகத் தலைவர்களுடனும் விசேட சந்திப்புகள் !

 

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்கு அடுத்த மாதம் செல்லவுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அங்கு உலக நாடுகளின் தலைவர்களுடன் முக்கிய சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.

செப்டெம்பர் 17 முதல் 27 வரை நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள செல்லும் ஜனாதிபதி தன்னுடன் முக்கியமான அமைச்சர்கள் சிலரையும் அழைத்துச் செல்லவுள்ளார்.

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்குவது உட்பட்ட முக்கியமான விடயங்கள் குறித்தான தனது நிலைப்பாட்டை அவர் ஐ நா பொதுச்சபையில் வெளிப்படுத்துவாரென அறியமுடிந்தது.